நாளை ஓட்டுப்பதிவு: இளைஞர்கள்–மாணவர்கள் சொந்த ஊர் பயணம்
சென்னை, ஏப். 23–
தமிழ்நாடு – புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களும் நடந்து வருகின்றன. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது.
ஓட்டுப்பதிவு நடை பெறுவதையொட்டி, தமிழ்நாடு – புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை விட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் இளைஞர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் ஓட்டுப் போடுவதில் ஆர்வமாக உள்ளனர். எனவே பெரும்பாலான இளைஞர்கள், மாணவ – மாணவிகள் நேற்றும் இன்றும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில் நிலையங்களிலும் அதிக கூட்டம் காணப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 25 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப் போடுவதில் ஆர்வம் காட்டுவது அரசியல் கட்சிகளிடையே எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel