தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து
சென்னை, ஏப். 23–
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகள் நூற்றுக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. தொடக்க கல்வி துறையின் அனுமதியும், அங்கீகாரமும் பெறாமல் இயங்கும் இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தர விட்டார்.
இதையடுத்து அனுமதி பெறாத 1296 பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரமின்றி செயல்பட்டு வந்த 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ–மாணவிகளை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இந்த மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel