ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, ஜூவாலா-அஷ்வினிக்கு வெண்கலம்
ஜிம்சியான், ஏப். 26-
கொரியாவின் ஜிம்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜூவாலா, அஷ்வினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 18 வயதான பி.வி.சிந்து, ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிஜியானை (சீனா) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் கடுமையாகப் போராடிய பி.வி.சிந்து, 21-15, 20-22, 12-21 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் அவர் வெண்கலம் வென்றார்.
இதற்கு முன்பு மூன்று முறை ஷிஜியானை சிந்து வீழ்த்தியுள்ளார். ஆனால், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷிஜியான் கடைசியாக மோதிய இரண்டு போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், அவரது ஒட்டுமொத்த ஆட்டத்திறன் திருப்தி அளிப்பதாக பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார்.
இதேபோல் மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்திய ஜோடியான ஜூவாலா கட்டா-அஷ்வினி பொன்னப்பா, 12-21, 7-21 என்ற நேர்செட்களில் லியோ யூ-லியோ யிங் ஜோடியிடம் தோல்வியடைந்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel