அமலாபாலுடன் விரைவில் திருமணம்: டைரக்டர் விஜய் அறிக்கை
டைரக்டர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய எல்லோருக்கும் நன்றி. நான் இதுவரை தனியாக இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையை எட்டி உள்ளேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆமாம் என் வாழ்க்கை துணையை தேடிய நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. என் வாழ்க்கை துணையாக நடிகை அமலாபாலை கண்டறிந்து உள்ளேன். அமலாபால் மிகவும் அழகான இதயத்தை கொண்டவர். அவரை மிகவும் காதலிக்கிறேன். கடைசி வரை அவருக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன்.
எங்கள் திருமணம் பற்றி பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குள் எங்களுக்கு தெரியாமலேயே திருமணம் பற்றிய செய்தி வெளிவந்து விட்டது. திருமணத்தை நண்பர்களிடமோ, ரசிகர்களிடமோ மறைக்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. தனிப்பட்ட முறையில் திருமண அழைப்பிதழோடு சந்திப்போம். அமலாபாலுக்கு படங்கள் கைவசம் உள்ளது. எனக்கும் எனது மனம் கவர்ந்த ‘சைவம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியுள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு திருமணம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel