Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

பாலிவுட் நடிகர்கள் -நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

புதுடெல்லி,

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24-ந்தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில்  தெக் சின் அக்தர் கூறியதாவது:-

ஒருநாள் பயிற்சி முகாமில் நான், யாசின் பத்கல், அசமதுல்லா அக்தர், ஜியா உர்  ரஹ்மான் ஆகிய 4 பேரும் தற்கொலை தாக்குதல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யாசின் பத்கல், இந்தி திரை உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறினார்.

இளைஞர்களை சீரழித்து, தவறான பாதைக்கு வழி நடத்துவதால், அதை தடுக்கும் வகையில் நடிகர், நடிகைகள் கொல்லப்ஒஅட வேண்டும் என்றார். மும்பையில் படப் பிடிப்பு நடக்கும் இடங் களிலோ அல்லது திரையுலக விழாக்கள் நடக்கும போது இதற்கான தற்கொலை தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அந்த தாக்குதல் மூலம் நிறைய நடிகர், நடிகைகளை கொல்ல முடியும் என்று யாசின் கூறினார்.

திரையுலக பிரமுகர்கள் மீது தாக்குதலுக்கு திட்டமிடுவது சற்று சவாலாக இருந் தது. எனவே நாங்கள் அத்தகைய தாக்குதலுக்கு எந்தவித தேதியோ அல்லது கால நிர்ணயமோ செய்ய வில்லை. இவ்வாறு அவன்  கூறினான்.

இதையடுத்து எந்தெந்த இந்தி நடிகர்கள், நடிகைகள் மீது தீவிரவாதிகள் குறி வைத்தனர் என்ற தகவல் திரட்டப்பட்டு  வருகிறது. அதற்கு ஏற்ப  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Apr 25 2014. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »