மும்பை. தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஜல் அகர்வால் மற்றும் […]
சென்னை, மார்ச்.1– தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in புதிய வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. அவருடைய பிறந்தநாளான இன்று (1-3-2014) அவராலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதலங்களில் உரையாடுவதற்கான வசதியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை […]
நியூயார்க், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலர் திறமை காரணமாக உயர் பதவிகளில் நியமித்து கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வரும் பிரபல வக்கீல் நிஷா அகர்வால் நியூயார்க் மேயர் அலுவலக குடியுரிமை விவகார கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனத்தை மேயர் டி பலாசியோ அறிவித்ததுடன், நிஷா ஏற்கனவே குடியுரிமை வேண்டுவோருக்காக செய்து வரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார். நிஷா அகர்வால் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். […]
சென்னை, மார்ச் 1– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 61–வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடக்கூடாது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி தி.மு.க.வினர் இன்று மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும், மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அப்போது கருணாநிதி மு.க.ஸ்டாலினை […]
நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்தார். இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்தபெருக்கால் விழிகளில் […]
வாஷிங்டன், மார்ச். 1– ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவருக்கு அடைக்கலம் தர ரஷிய அதிபர் புதின் சம் மதித்து விட்டார். மேலும், உக்ரைனில் தன்னாட்சி உரிமை பெற்ற கிரிமியா தீபகற்பத்தின் தலைநகர் சிம்பெரோ போவில் உள்ள பாராளுமன்ற […]
புதுடெல்லி, மார்ச். 1– காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை […]
புதுச்சேரி, மார்ச்.1– புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:– புதுவை பொதுப்பணி துறையில் பணி நீக்கப்பட்ட 1311 பேருக்கு வருகிற 3–ந் தேதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.137 சம்பளமாக வழங்கப்படும். பொதுப்பணிதுறையில் பணி புரிந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 150 பேருக்கு ‘கேஷுவல் லேபர்’ பணி வழங்கப்படும். கால்நடை மருத்துவ கல்லூரியில் பணி நீக்கப்பட்ட 109 பேர் 3–ந் தேதி மீண்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். காரைக்காலில் சிறப்பு […]
காரகாஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. காரகாஸ் உள்பட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால் வாகன, லாரிகள் போக்குவரத்து முடக்கி விட்டன. இதன் விளைவாக பால், காய்கறிகள், சமையல் கியாஸ் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக வளாகம், கடைகள் முன் பொதுமக்கள் வெகுநேரம் காத்துக்கிடக்கிறார்கள். […]