கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!
Written by Niranjana
அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.
அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரும்போது, அவர் உடலில் இருந்து வியர்வை கடலில் விழுந்தது.
மழை நீரானது சுவாதி நட்சத்திர வேளையில் கடலில் இருக்கும் சிப்பிக்குள் விழுந்து முத்தாக கிடைக்கிறது என்கிறது நட்சத்திர சாஸ்திரம்.
அதுபோல –
கடலில் வசித்த “சுவர்ச்சலா” (சுசீலா) என்கிற தேவகன்னி ஒருத்தி, கடலில் விழுந்த ஆஞ்சனேயரின் வியர்வையை விழுங்கினாள். இதனால் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த தேவகன்னியை மணந்தார் அனுமன்.
இப்படி குடும்பத்தஸ்தர் ஆன காரணத்தால் அனுமன், தன் பக்தர்களுக்கு கல்யாண ஆஞ்சனேயராகவும் காட்சி தருகிறார்.
தம்பதி சகிதமாக இருக்கும் கல்யான ஆஞ்சனேயரை வணங்கினால், கிரகங்களால் உண்டாகும் தோஷம் நீங்கும். திருமண தடை விலகும். கல்யாண ஆஞ்சனேயர் படத்தை வணங்கி வந்தாலும் நன்மைகள் கிடைக்கும்!
கோயில் அமைந்துள்ள இடம்…
கூடுவாஞ்சேரி – மறைமலை நகருக்கு இடையே உள்ள காட்டாங்கொளத்தூர் தைலாவரம் என்ற கிராமத்தில் எஸ்.ஆர்.எம். கல்லூரி பக்கத்தில் கல்யாண ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2014 bhakthiplanet.com All Rights Reserved