வெனிசூலாவில் போராட்டம் எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
காரகாஸ்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. காரகாஸ் உள்பட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால் வாகன, லாரிகள் போக்குவரத்து முடக்கி விட்டன. இதன் விளைவாக பால், காய்கறிகள், சமையல் கியாஸ் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக வளாகம், கடைகள் முன் பொதுமக்கள் வெகுநேரம் காத்துக்கிடக்கிறார்கள். சில நகரங்களில் கடைகள் மூடிக்கிடக்கின்றன. சில இடங்களில் பகுதி நேரம் மட்டும் திறந்து வியாபாரம் நடக்கிறது. போராட்டம் மேலும் நீடிக்குமானால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாக நேரிடும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் போராட்டத்தையட்டி நடைபெற்ற வன்முறைகளில் இதுவரை 17 பேர் பலியாகி விட்டார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel