சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனின் உத்தம வில்லன் போஸ்டர்
உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது.
விஸ்வரூபம் பாகம்-2 படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல் ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். சமீபத்தில் உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலைமையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையும் சேர்ந்து வந்துவிட்டது. உத்தம வில்லன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், வேறொரு புகழ் பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த எரிக் லஃபோர்க் என்ற புகைப்படக்காரரின் புகைப்படம் போலவே உள்ளது என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.
பிரான்சைச் சேர்ந்த பிரபல புகைப்படக்காரரான எரிக் லஃபோர்க் அந்தப் படத்தை 2009-ல் தனது கேரளா சுற்றுப் பயணத்தின் போது எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை காப்பியடித்துதான் கமல் உத்தம வில்லன் படத்தில் தனது கெட்டப்பை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படத்தில் இருக்கும் இந்த டிஸைன் கேரளாவில் மலபார் பகுதியில் கொண்டாடப்படும் தேயம் என்கிற கலையின் வடிவமாம். இந்த நாட்டியத்தின் கலைஞர்கள் இது போன்றுதான் மேக்கப் போட்டு ஆடுவார்களாம். இதனைத்தான் அந்த பிரெஞ்சு புகைப்படக்காரர் புகைப்படமாக எடுத்து தனது வலைத்தளத்தில் வைத்துள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel