ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கெட்டுகள் விற்று ஐ.ஆர்.சி.டி.சி சாதனை
இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் ஈ-டிக்கெட்டுகள் விற்கப்படும் இணையதளப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி மட்டும் 5.80 லட்சம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்துள்ளது
IRCTC என்னும் இந்த இணையத்தள பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அந்த இணையதளத்தின் பதிவேற்ற வேகம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிப்பது உண்டு. ஆனால், மார்ச் 19 ஆம் தேதி மட்டும் இந்த இணையத்தளம் மூலமாக 5.80 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 5.72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு தினசரி 3.85 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 6.86 லட்சம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தினர். இந்த ஆண்டு விற்பனை 4.63 லட்சமாகவும் பயணம் செய்வோர் 9.47 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
இதனால் ரயில்வேக்கான தினசரி பணப் பரிவர்த்தனை 37 கோடியிலிருந்து 53 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் கணக்கீடு டிக்கெட்டுகள் விற்பனையில் 20 சதவீத உயர்வையும், பயணிகள் போக்குவரத்தில் 38 சதவிகித உயர்வையும் குறிக்கின்றது.
இதன் பயனாளிகளுக்கு உதவும் விதமாக தற்போது தட்கல் விற்பனை நடைபெறும் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் ஐ.ஆர்.சி.டி.சி. லைட் என்ற புதிய விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகள் காலை 9.30 மணியிலிருந்தே செயல்படத் துவங்குகின்றன என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel