உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு: இந்தியர் சாதனை
மிக்ஸிகன்,மார்ச்.8 – உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார்.
கான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித் தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு, விரல் ரேகை பதிவை மிகவும் துல்லியமாக அளிக்கும் என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு 3டி விரல் ரேகை பதிவுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற அனில் ஜெயின் முடிவு செய்துள்ளார். விரல் ரேகை பதிவுத் துறையில் ஏற்கெனவே அவர் 6 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel