உத்தம வில்லனுக்கு பிரச்சனையா? தயாரிப்பாளர் விளக்கம்
உத்தம வில்லன் படத்துக்கு கன்னட சினிமாவைச் சோந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடகாவில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை சென்னை மாற்றியதாக நேற்று முன்தினம் திடீர் புரளி கிளம்பியது. இது உண்மையா?
உத்தம வில்லனின் பர்ஸ்ட்லுக்கில் ஆரம்பித்தது பிரச்சனை. பிரான்சைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த போட்டோவை கமல் காப்பியடித்தார் என்றனர். அதற்கு மும்பையில் விளக்கமளித்தார் கமல். இந்நிலையில் பெங்களூருவில் உத்தம வில்லனின் படப்பிடிப்பு தொடங்கியது.
இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில் நடந்து வருகிறது. இடைவெளி இல்லாமல் ஒரே வீச்சில் படப்பிடிப்பை நடத்தயிருப்பதாக படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே கமலும், படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தும் கூறியிருந்தனர். இப்படியொரு சூழலில்தான், கன்னட தயாரிப்பாளர்கள் உத்தம வில்லன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் வதந்தி கிளம்பியது.
இதனை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் மறுத்தார். ஊடகங்களில் வந்தது போல் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை, யாரும் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பெங்களூரு படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
அதனை உறுதிப்படுத்துவது போல் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியாவும் ட்வுட்டரில் எழுதியுள்ளார். கமல் சார், ரமேஷ் அரவிந்த் சாருடன் ஒரு நல்ல ஷெட்யூல்டை முடித்து சென்னை திரும்பியுள்ளோம் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம், பாலசந்தர், ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel