உக்ரைனில் ராணுவம் முற்றுகை: ரஷியாவுக்கு ஒபாமா எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச். 1–
ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவருக்கு அடைக்கலம் தர ரஷிய அதிபர் புதின் சம் மதித்து விட்டார்.
மேலும், உக்ரைனில் தன்னாட்சி உரிமை பெற்ற கிரிமியா தீபகற்பத்தின் தலைநகர் சிம்பெரோ போவில் உள்ள பாராளுமன்ற மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களை ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
அங்கு ரஷிய தேசிய கொடியையும் ஏற்றினர். நேற்று சிம்பெரோபோ மற்றும் செவாஸ் தோபோ ஆகிய இடங்கில் உள்ள 2 விமான நிலையங்களை ரஷிய கடற்படையினர் திடீரென முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதனால் அங்கு போர் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘ரஷியாவின் இத்தகைய நடவடிக்கை உக்ரைனின் இறையாண்மை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை மிகவும் ஸ்திர தன்மையற்ற தாக்கி விடும். அதில், ரஷியாவோ அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளோ தலையிடக்கூடாது.
அது உக்ரைன் நாட்டு மக்களின் பிரச்சனை. அதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். உக்ரைன் எல்லையில் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் ரஷியா அத்து மீறியுள்ளது. இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது.
ஒலிம்பிக் போட்டி முடிந்த சில நாட்களிலேயே ரஷியா சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் சர்வதேச சமுதாயத்துடன் அமெரிக்கா இணைந்து நீதியை நிலை நிறுத்த பேராடும்’’ என தெரிவித்துள்ளார்.
ஆனால், எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒபாமா தெரிவிக்க வில்லை.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel