இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்
சென்னை,=
முதல் – அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் கடந்த 3-ந்தேதி 32 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். 8 படகு களையும் பறிமுதல் செய்து இருந்தனர். இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது பாக்ஜலசந்தி பகுதியில் மேலும் 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து உள்ளனர். கடந்த 5-ந்தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை பிடித்து சென்றனர். 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். அதே தினத்தில் 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர். 2 படகு களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களும் மன்னார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஏழை, அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவை யான மீன்பிடி ªபாருட் களை பிடுங்கி கொள்கி றார்கள். இலங்கை கடற் படை தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபடுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 148 தமிழக மீன வர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். 5 மீனவர்கள் 2 ஆண்டுக்கு மேல் இலங்கை சிறையில் வாடுகிறார்கள் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 39 படகுகளும் மீட்கபடாமல் இருக்கிறது.
உயர்நிலை தூதரக ரீதி யில் கொண்டு சென்று தமிழக மீனவர் பிரச் சினைக்கு தீர்வு காண வேண் டும் என்று கேட்டுக் கொள் கிறேன். தற்போது சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர் கள் உள்பட 177 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் படகுகளையும் மீட்டு தர வேண்டும்.
கொழும்பில் வருகிற 13-ந் தேதி நடைªபறும் பேச்சு வார்த்தைக்கு முன்பு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel