17ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்த நாளுக்குள் விண்ணப் பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க லாம். தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.
அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த சிறப்பு மையங்களில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவு சிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க கூடாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரங்கள் தேர் வுத்துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்கு நர் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் தெரிந்து கொள்ளலாம்.
‘எச்’ வகை தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ஸி50 மற்றும் இதர கட்டணம் ஸி35 செலுத்த வேண் டும். ‘எச்பி’ வகை நேரடித் தனித் தேர்வர்கள் ஸி187 செலுத்த வேண்டும். இத்துடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ஸி1000 மற்றும் ஆன்லைன் கட்டணம் ஸி50 ஆகியவற்றை மட்டுமே இந்த சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும். இதற்கான ஹால்டிக்கெட்டுகளை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel