ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன்: சிம்பு அறிக்கை
நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம்.
எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது. இந்த அறிக்கையை என்னுடைய நண்பர்கள், நெருங்கியவர்கள், ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். இந்த முடிவால் நான் மிகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel