மொபைல், கார் விலைகள் குறைகின்றன
மொபைல் போன்கள், கார்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைவதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அதனால் அவற்றின் விலைகள் குறையும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மொபைல்களுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைகின்றன. இதனால், மொபைல் போன்களின் விலைகள் குறைகின்றன.
மேலும், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான உற்பத்தி வரி, 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, நடுத்தர மற்றும் பெரிய கார்களின் உற்பத்தி வரி 24-ல் இருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.யூ.வி. வகை கார்களுக்கான உற்பத்தி வரி 30-ல் இருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தொழில்களை ஊக்குவிப்பதற்காக சுங்க வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறினார்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தையில் மோட்டார் நிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் கண்டன. முன்னதாக, 2013-14 நிதியாண்டில் கார்களின் விற்பனை 5 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel