முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
சென்னை, பிப்.7 – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று காலை சந்தித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆந்திர மாநில பிரிவினை கூடாது என்ற தங்களின் கருத்துக்கு ஆதரவு கேட்பதற்காக, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னைக்கு நேற்று வந்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று பகல் 11.50 மணிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். இருவரும் 12.30 மணி வரை பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒருங்கிணைந்த ஆந்திரா கோரிக் கைக்கு ஆதரவு தருமாறு சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித்தெலுங்கானா உருவாவதற்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மாநில பிரிவினையை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது என்றும், இதற்கு ஆதரவு கோரியும் பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் தாம் சந்தித்து வருவதாக கூறிய சந்திரபாபு நாயுடு இதன் அடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டதாக கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் அவரை சந்தித்தபிறகு, செய்தியாளர்களிடம்பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:_
வாக்கு வங்கி அரசியல் நடத்தி நாட்டை துண்டாட நினைக்கும் காங்சிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
காங்கிரஸ் கட்சி சுயநல அரசியல் நடத்தி வருகிறது. ஆந்திர பிரதேச மக்களின் உணர்வுகளை மதிக்காமல், வாக்குவங்கி அரசியல் நடத்தி, நாட்டை துண்டாட நினைக்கிறது. முன்பு,மாநில பிரிவினைகள் ஏற்பட்டு தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதுஅனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை மதித்து , எல்லோரையும் கலந்து பேசி குறைபாடின்றி நிறைவேற்றினார்கள்.
ஆனால் இப்போது, காங்கிரஸ் சுயநல அரசியலுக்காக ஆந்திராவை பிரிக்க நினைக்கிறது. மாநிலங்களை மதிக்காத போக்கு தொடர்கிறது. இதுவரையிலும், 356வது பிரிவை பயன்படுத்தி 90 முறை மாநிலங்களை கலைத்திருக்கிறது.
இத்தகையை போக்கிற்கு,காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்காமல் விடமாட்டார்கள். ஆந்திர மாநிலத்தை பிரிக்கக்கூடாது என்கிற எங்களின் கருத்துக்கு ஆதரவு கேட்டு, அனைத்து மாநில முதலமைச்சர்களையும், தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்.
ஒருங்கிணைந்த ஆந்திராதான் எங்களின் ஒரே நோக்கம் .இதற்கு நாடுமுழுவதும் ஆதரவு திரட்டுவோம்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel