பூமியை நோக்கி வரும் ரஷ்ய விண்கலத்தால் ஆபத்து
செயலிழந்து போன நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்கலம் பூமியை நெருக்கும் அதனுடைய இயக்கம் கட்டுப்பாடற்று இருக்கும் என்று கர்னல் அலெக்சி சொலோடுகின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மூன்று டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான பகுதிகள் எரிந்துவிடும் என்று கூறப்பட்டாலும், அதன் மிச்ச பகுதிகள் கீழே விழும்போது பூமியின் மேற்பரப்பை பாதிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பசிபிக் பெருங்கடலில் இவை விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெளிப்புறக் காரணங்களால் இவை விழும் நேரமும், இடமும் மாறுபடலாம் என்று அவர் மேலும் கூறினார்.
பூமியின் பெரும்பகுதி நீர்ப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாலும், மக்கள் நெருக்கடியான இடங்கள் குறைவாக உள்ளதாலும் இந்த செயற்கைக்கோளின் சிதைவுகளால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் தாங்கள் செயல்பட்டு வருவதாக வானியல் பத்திரிகை ஆசிரியர் டேவிட் எய்ஷர் என்பவர் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய ஜியோஸ் என்ற செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel