நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்
கலிபோர்னியா: அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. மண்ணுக்குள் பகுதியாக புதைந்து கிடந்த அந்த டின்னை தம்பதி கஷ்டப்பட்டு தோண்டி எடுத்தனர். உள்ளே பார்த்தால் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர். அந்த தகர டின் முழுவதும் 1400 தங்க நாணயங்கள் காணப்பட்டன.
இதுகுறித்து கலிபோர்னியாவின் நாணயவியல் நிபுணர் மெக்கார்த்தி கூறுகையில், தம்பதியிடம் சிக்கிய தங்க நாணயங்கள் சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையானவையாகும். அவை 1847 முதல் 1894ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். அவற்றில் பெண் அரசியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க மதிப்பில் அதன் உண்மையான மதிப்பை அளவிட முடியவில்லை. சுமார் பத்து மில்லியன் டாலர் வரை மதிப்புடையது என்று கருதப்படுகிறது. மேலும் 19ம் நூற்றாண்டின் நாணயம் வடக்கு கலிபோர்னியாவில் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதி தங்க புதையல் நிறைந்த பகுதி என்று ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்தும் நிலவி வருகிறது. தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் தங்க நாணய புதையல் தம்பதிக்கு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel