திருமணம் செய்யவில்லை: நடிகர் அபிசேக் பச்சன் நெகிழ்ச்சி
மும்பை,
நான் ஒரு நடிகர் என்பதாலோ அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ, ஐஸ்வர்யா ராய் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நடிகர் அபிசேக் பச்சன் நெகிழ்ச்சிபட தெரிவித்தார்.
நடிகர் அபிசேக் பச்சன்
இந்தி நடிகர் அபிசேக் பச்சன்–ஐஸ்வர்யா ராய் திருமணம் கடந்த 2007–ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நடிகர் அபிசேக் பச்சன் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியிட்டார். அவர் கூறியதாவது:–
நெகிழ்ச்சி
என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தான் இந்த பூமியில் மிகவும் அழகான பெண். நான் தினமும் என் முகத்தை பார்த்த கண்ணாடியில் பார்க்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். காரணம் என் முகம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே நான் அவருடன் போட்டியிட விரும்பவில்லை. அது என்னால் முடியாத விஷயமும் கூட.
நாங்கள் இருவரும் அழகினால் இணைந்தவர்கள் கிடையாது. ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகான பெண். சாதாரண மக்கள் அவரை பார்ப்பது அரிது. நான் ஒரு நடிகர் என்பதாலோ, அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும், அவர் ஒரு உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவ்வாறு அபிசேக் பச்சன் தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel