டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 4 மாத குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டு சிறை
பீஜிங்,
சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்த சொவ் என்பவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகார் தொடர்பாக போலீசார் விசாராணை நடத்தியதில் அவரது கணவரே குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. சொவ் மீது குழந்தைகள் கடத்தல் குற்றத்திற்காக கோட்டு 5 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது. சொவ் தனது ஆண் குழந்தையை கடந்த 1650 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார். சீனாவில் ஒரு குழந்தை சட்டம் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டதால் அங்கு குழந்தைகள் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. ஆனால் தற்போது அந்த சட்டம் தளர்த்தப்பட்டது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel