சிங்கப்பூர் கலவரம்: மேலும் ஒரு இந்தியருக்கு ஜெயில்
சிங்கப்பூர், பிப். 17-
சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 43 அதிகாரிகள் தாக்கப்பட்டனர். 24 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி கலைந்து செல்ல மறுத்ததால் இவருக்கு 15 வாரங்கள் ஜெயில் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற அந்நபரின் பெயர் சிங்காரவேலு விக்னேஷ் (23) ஆகும்.
முதலில் அவர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் இவருக்கு ஏழு வருடம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருக்கும். சிங்காரவேலுவின் சக கட்டுமான தொழிலாளியான சின்னப்பா விஜயரகுநாத பூபதி (32) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்னும் 23 இந்தியர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
கலவரத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து 52 இந்தியர்களும் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரும் நாடு கடத்தப்பட்டனர். 1969க்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய கலவரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel