சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மிகப்பெரும் தவறு: உமாபாரதி
இந்தூர்,
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது மிகப்பெரும் தவறு பாரதீய ஜனதா துணைத்தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சச்சின் தெண்டுல்கர், கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் 40 வயது தெண்டுல்கருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார்.
இந்த நிலையில், சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது மிகப்பெரும் தவறு என்று உமாபாரதி தெரிவித்துள்ளார்.மேலும், ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் பெயரை நாட்டின் உயரிய விருதுக்கு பரிசீலனை செய்ய கூடாது.ஒரு கிரிக்கெட் வீரர் தன்னைதானே ரூ 4-5 கோடிக்கு விற்பனை செய்து கொள்கிறார். இவர்களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமா என்று தெரிவித்துள்ளார்.மேலும், தனிப்பட்ட முறையில் நான் சச்சின் தெண்டுலருக்கு எதிரானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel