ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் கருவி ஆதார்: ப.சிதம்பரம் விளக்கம்
புதுடெல்லி, பிப். 17-
“வீடுகள் இல்லாதவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதார் என்ற தனித்துவ அடையாள அட்டை அதிகாரமளிக்கும் கருவியாகும்” என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது:-
ஆதாரை குறை சொல்பவர்களும் கூட அது ஒரு அதிகாரமளிக்கும் கருவி என்று உணர்ந்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கடந்த ஆண்டு சமையல் எரிவாயுவிற்கான மானியம் நேரடியாக ஆதார் அட்டையின் மூலம் ரூ.3370 கோடி செலவில் சுமார் 2.1 கோடி சமையல் எரிவாயு பயனாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 57 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது 22 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களிலும் அதார் அட்டைகளுக்கு பதிவு செய்யும் பணியை தொடங்க இந்தமாத துவக்கத்தில் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel