என்.டி.ராமராவ் மகள் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விலகுகிறார்
ஐதராபாத், பிப்.15–
தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியுமான மறைந்த என்.டி. ராமராவ் மூத்த மகள் புரந்தேஸ்வரி. இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர் மன்மோகன்சிங் மந்திரி சபையில் வர்த்த துறை இணை மந்திரியாக உள்ளார்.
தெலுங்கானா பிரச்சினையால் சீமாந்திராவில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து உள்ளது. இதனால் புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விலக திட்டமிட்டு உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேரக்கூடும் என்றும் விசாகப்பட்டினம் அல்லது ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் இப்போது புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் இணைவது உறுதியாகி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியில் சேர அவரிடம் சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணா பேச்சு நடத்தி உள்ளார். சந்திரபாபு நாயுடு சார்பில் பாலகிருஷ்ணா இந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
எனவே புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விரைவில் விலகி தெலுங்குதேசம் கட்சி சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில் குதிக்க உள்ளார். விஜயவாடா தொகுதிக்குட்பட்ட வெனமல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel