இங்கிலாந்து ஓவியர் பிரான்சிஸ் பேகனின் ஓவியம் ரூ.430 கோடிக்கு ஏலம்
லண்டன், பிப். 15–
இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பேகன். இவர் கடந்த 1992–ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் தனது ஓரின சேர்க்கை நண்பர் ஜார்ஜ் டயர் என்பவரின் ஓவியத்தை வரைந்து இருந்தார்.
இந்த ஓவியம் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்த ஓவியம் ரு.430 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவியம் 6 அடி உயரம் உள்ளது. அதில் ஜார்ஜ் டயர் உடலின் ஆடை அணியாத நிலையில் ஒரு இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
இது உலக அளவில் அதிக விலைக்கு ஏலம் போன 44–வது ஓவியம் என ஏல நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
டயர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தார். ஓவியர் பிரான்சிஸ் பேகன் வீட்டில் கொள்ளையடிக்க வந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.
அதன் பின்னர் ஓவியர் பிரான்சிசுடன் நண்பரானார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel