அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்: 25 பேர் பலி
நியூயார்க்,
அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன.இதனால் ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வாஷிங்டன், நியூயார்க், நியூ இங்கிலாந்து, விர்ஜீனியா மைனே உள்ளிட்ட பெரும்பாலான நகர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிககட்டிகளாக உறைந்துவிட்டன. ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினாவில் 4 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.1500 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
அதேபோல், இங்கிலாந்திலும் பனிப்புயல் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் தென்மேற்கு இங்கிலாந்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel