அங்கன் வாடி கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.96.31 கோடி ஒதுக்கீடு
சென்னை, பிப்.1-_ முதல்_அமைச்சர் ஜெயலலிதா அங்கன் வாடி கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.96.31 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார் என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதிதெரிவித்தார்.
பல்லடம் தொகுதியில் உள்ள வலையப்பாளையம் மற்றும் அகிலாண்டபுரத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்ததால் அவை சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகின்றன.
புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பா.வளர்மதி கூறியதாவது:_
அங்கன்வாடி மையங்களுக்கு தேவைப்படும் புதிய கட்டிடங்களை கட்டவும், கட்டிடங்களை புதுப்பிக்கவும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா ரூ.96.31 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார். எனவே, தேவைப்படும் இடங்களில் புதிய கட்டிடம் கட்டவும், பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடங்களை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். உறுப்பினர்களில் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கட்டிடங்கள் கட்டலாம்.இவ்வாறு அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel