அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும்: அவினாஷ்சந்தர்
புதுடெல்லி,
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,500 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை, வளர்ச்சி சோதனைகள் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறுகையில், அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு இந்திய ராணுவத்தின் ஆயுத படையில் இணைக்கப்படும். வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு அல்லது மூன்று சோதனைகள் செய்யப்படவுள்ளன.இந்த சோதனைகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது என்றுதெரிவித்தார்.
மேலும் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் அரிகாண்ட் அணு நீர்மூழ்கிகப்பலின் சோதனை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel