ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் காலத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்க செய்யப்பட்டது
பெர்லின், ஜன. 31-
உலகையே ஆட்டிப்படைக்க நினைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் பேராசையின் விளைவாக 1-9-1939 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப்போர் 6 ஆண்டு காலம் நீடித்து 2-9-1945 அன்று முடிவுக்கு வந்தது.
இந்த போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் ஜெர்மனியின் பல பகுதிகளில் புதைந்து கிடப்பதாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனி மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இந்நிலையில், மேற்கு ஜெர்மனியின் யூனி-சென்டர் அருகே புதிய கட்டுமான பணிகளுக்கான வேலை நடைபெற்று வந்தது.
அங்குள்ள 45 மாடி அடுக்கு குடியிருப்பின் அருகே 250 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தங்களது வீட்டின் அருகே இவ்வளவு பெரிய குண்டு இத்தனை காலம் தூங்கிக் கொண்டிருந்ததை அறிந்த அந்த அடுக்குமாடியில் குடியிருக்கும் சுமார் 2 ஆயிரம் பேர் பதற்றமடைந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த குண்டினை ஜெர்மனியின் வடகிழக்கு பகுதியான கொலோனுக்கு கொண்டு சென்று நேற்று வெற்றிகரமாக செயலிழக்க வைத்தனர். இதனையொட்டி, அப்பகுதியில் வசித்து வந்த சுமார் ஆயிரத்து 800 மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்க வைக்கப்பட்டதை அறிந்த அவர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel