ஆப்பிள் நிறுவனம் 32.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது.
குபர்டினோ, ஜன. 16-
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயன்பாடுகளைப் பெறுவதற்கு பெற்றோர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை உபயோகிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உபயோகித்த பின்னர் உடனடியாக மூடப்படாமல் 15 நிமிடம் கழித்தே அந்த சாளரங்கள் (விண்டோஸ்) மூடப்படுவதால் அதற்குள் குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பயன்பாட்டுப் பொருட்களை பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் தங்களின் ஐபாட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளனர்.
இவற்றிற்கான கட்டண விகிதங்கள் 99 சென்ட்டிலிருந்து 99.99 டாலர் வரை மாறுபடும். இதற்காகத் தாங்கள் செலுத்தவேண்டிய கட்டணத் தொகை குறித்த விபரம் கிடைக்கப் பெற்றவுடன் பல பெற்றோர்கள் அதிர்ந்துபோனார்கள். அதன் பின்னரே அவர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. பெற்றோர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டி தெரிவிக்காததை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளித்து விடுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளது.
நேற்று அமெரிக்காவின் வர்த்தகக் கமிஷனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஆப்பிள் நிறுவனம் 32.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது. குழந்தைகளின் இணையதளப் பயன்பாடுகள் குறித்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அளிக்கும் அதிகபட்ச நஷ்டஈடு இதுவாகத்தான் இருக்கும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. மொபைல் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறு வயதினருக்கு இருக்கும் அதீத ஆர்வம் தெரிந்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்பிற்கு அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையே இந்த நஷ்ட ஈடு சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel