பணக்கட்டுகளால் சுவர் எழுப்பிய கிராம மக்கள்
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பணக்கட்டுகளை 7 அடி சுவற்றை போல அடுக்கி வைத்துள்ளனர்.
சீனாவின் சிட்சுவன் மாகாணத்தில் உள்ள ஜென்ஷெ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் பங்களித்த சங்கத்தின் வருமானம் அருகிலுள்ள வங்கி ஒன்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் மொத்த வருமானமான 22 லட்சம் டாலர் மதிப்புடைய சீனப் பணக்கட்டுகளை வங்கியில் இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது.
கிராம மக்களுக்கு பிரித்தளிக்கப்பட வேண்டிய இந்த பணக்கட்டுகள் மிக அதிக அளவில் இருந்ததால், அந்த பணம் அங்குள்ள ஒரு கிராம அலுவலகத்தின் வெளியே சுவர் போன்று அடுக்கி வைக்கப்பட்டது.
2 மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலத்திற்கு சுவரைப் போன்று அடுக்கி வைக்கப்பட்ட அந்த பணக்கட்டுகளை 7 காவலாளிகள் பாதுகாத்தனர்.
மொத்த பணத்தையும் கிராம மக்களிடம் ஒப்படைக்க 2 நாட்கள் ஆனதால், இரவு நேரத்தில் அந்த பணக்கட்டுகளின் மீது காவலர்கள் படுத்து உறங்கினர்.
இதுகுறித்து தெரிவித்த காவலர் ஒருவர், அவ்வளவு பணத்தின் மீது படுத்து உறங்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட கிராமவாசி ஒருவர், எனக்கு அளிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்பதற்குள் எனது கைகளில் இருந்த வலிமை எல்லாம் போய்விட்டது என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel