நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு
உயர்நீதிமன்றங்களில் உள்ள தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும், ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை முடித்து வைக்க நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றங்களின் தற்போதையை நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்துவது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், நீதிபதிகளின் எண்ணிக்கை பற்றிய பரிந்துரை பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி வைத்து, நிதி ஆதாரங்களை பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மொத்தம் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. எனவே, 25 சதவீதம் பணியிடங்கள் உயர்த்தப்படும்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆக அதிகரிக்கும். இதுகுறித்து தலைமை நீதிபதி தலைமையில், நீதிபதிகள் கமிட்டி விரைவில் கூடி ஆலோசனை நடத்துகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel