ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் -2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை 2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஐஏஸ் அதிகாரி அசோக் கெம்கா, உத்திரபிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி துர்கா நாக்பால் ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரமணாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை 2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு, பணி ஓய்வு, மத்திய பணிக்கு தற்காலிக பணிமாற்றம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே, 2 ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யலாம் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel