மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை இல்லை: தமிழக அரசு
மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை எதுவும் இல்லை என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் (சிவகங்கை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) ஆகியோர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி இல்லாததால் சாதாரண மக்கள் வீடுகட்ட முடியவில்லை. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்று குற்றம்சாட்டினர்.அதற்கு பதிலளித்து அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை எதுவும் இல்லை. மணல் அள்ளுவதற்கான விதிமுறைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் மாட்டு வண்டிகள் சங்கத்தினர் அணுகினால் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும். அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel