சமையல் எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் ‘விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்’
சென்னை,
தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும்.
இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதை 24 சிலிண்டர்களாக உயர்த்த வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த விலை உயர்வினால் மாத வருமானம் பெறும் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இத்தகைய செயல் நியாயமற்றது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel