Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை அறியவும் உதவும் வகையில் 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல் கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர் களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கப்படும் என்று 2.11.2012 அன்று சட்ட மன்றப் பேரவையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு 19 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணினி கள் வழங்குவதன் அடை யாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெய லலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக் குநர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Jan 2 2014. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »