மும்பையில் ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்
மும்பை,
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில், பாரத ரத்னா விருது பெற்ற திரை இசை பாடகியான லதா மங்கேஸ்கர் கலந்து கெள்கிறார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பாக 1962ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரில் கலந்து கொண்ட வீரர்களின் நினைவாக 1963ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி அவர், ஏ மேரே வதன் கே லாகோன் என்ற தேசப்பற்று மிக்க இந்தி பாடலை பாடினார். தற்போது, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு லட்சம் பேர் முன்னால் அவர் இந்த பாடலை பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், பரம் வீர் சக்ரா விருது பெற்ற 100 பேர், மஹாவீர் சக்ரா மற்றும் பிற தைரிய விருதுகளை பெற்றவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அமைப்பாளரும், பாரதீய ஜனதா கட்சியின் மும்பை தொகுதி உறுப்பினருமான மங்கள் பிரபாத் லோதா கூறும்போது, இந்தியர்கள் மற்றும் வருங்கால தலைமுறையினரிடம் தேசப்பற்றினை ஏற்படுத்துவதற்காக தேசப்பற்று மிக்க பாடலின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டமானது நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கலந்து கொண்டு லதா மங்கேஸ்கருக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel