கத்திரிக்காய் வதக்கல்
தேவையான பொருட்கள்
நீல கத்திக்காய் – ¼ கிலோ
ப. மிளகாய் – 4
கொத்தமல்லி – ½ கட்டு
இஞ்சி – சின்னத்துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிகரண்டி
செய்முறை
கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும்.
சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைப் பச்சை வாசனைப் போக வதக்கவும்.
கழுவிய கத்திரிக்காயை கடாயில் பொட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
பத்து நிமிடத்தில் கத்திரிக்காய் நன்றாக வெந்திருக்கும். இதனைச் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel