தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா
நியூயார்க்,
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் தொலைபேசியில் பேசிய ஜான் கெர்ரி, இந்தியாவின் உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை உணர்வதாகம், இந்த நடவடிக்கைக்கு வருந்துவதாகவும் கூறினார். மேலும் இந்த பிரச்சனையால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ள போதிலும், மன்னிப்பு கேட்க மறுத்துள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel