இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்
லண்டன்,
இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் இங்கிலாந்தின் வயதான தம்பதியாக உள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்கள் இந்த வாரம் தங்களது 88வது திருமண நாளை கொண்டாட உள்ளனர்.
கார்தாரி (101) அவரது கணவர் கராம் சந்த் (108) பிராட்போர்டு நகரில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் பால் சந்த் அந்நகரத்தில் காஸ்டல் பப் ஒன்றை நடத்திவருகிறார். அவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினரின் திருமண நாள் வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அங்குள்ள செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது. அவர்கள் உலகில் மிகநீண்ட நாட்கள் வாழ்ந்த ஜோடியாக இருந்தால், கின்னஸ் உலக சாதனை பட்டியலை கேட்க காத்திருக்கின்றனர்.
இந்த ஜோடி கடந்த மாதம் தங்களது 101வது மற்றும் 108வது பிறந்த நாளை கொண்டாடினர். இந்த விழாவில் உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 8 குழந்தைகளும், 27 பேர குழந்தைகளும், 10 கொள்ளு பேரனும் உள்ளனர்.
88வது திருமண நாளை கொண்டாட உள்ள கராம் சந்த், நாங்கள் இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமாக உள்ளோம். மற்றொரு திருமண நாளை கொண்டாட உள்ளது, எங்களது கனவு நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel