மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயந்தி நடராஜன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது பதவியை மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்படுகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel