ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” விருது: ரஷ்யா வழங்கியது
புதுடெல்லி, டிச.19-
பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” என்ற ரஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்தியாக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததை தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி பிள்ளைக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில் “நீங்கள் இரு நாடுகளின் கூட்டு திட்டம், அமைதி, ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும்பங்காற்றியதை பெருமைப்படுத்தும் விதத்திலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் அந்நாட்டு அரசின் உயரிய விருதான “ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்” என்ற விருது, பா.ஜனதா கட்சி தலைவரும், பொது கணக்கு குழு தலைவருமான முரளி மனோகர் ஜோஷிக்கு வழங்கப்பட்டது.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே. அந்தோணி, ரஷ்ய அரசின் உயரிய விருதை பெற்ற இவ்விருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel