அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி ஐ.நா. பிரதிநிதியாக நியமனம்
புதுடெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கவுரப்படுத்துவதற்காக, அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப் பாதுகாப்பு கிடைக்கும்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரி தேவயானி கோப்ரகடேவை(39), விசா விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசார் கைது செய்து மிகவும் மோசமாக நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை தூதர் தேவயானிக்கு அமெரிக்காவின் முழு பாதுகாப்பு கிடைக்க அவரை, ஐ.நா நிரந்தர பணிக்கு மத்திய அரசு பதவி உயர்த்தி மாற்றம் செய்து உள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழு பாதுகாப்பு கிடைக்கும்.
இந்நிலையில் இப்பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிரொலித்தது.அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சீதாராம் யெச்சூரி,இச்சம்பவத்தை சுயமரியாதை உள்ள எந்த நாடாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் செயல் அவர்களின் போலித்தனத்தை காட்டுகிறது. இச்சம்பவம் மட்டும் அல்லாமல், முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய மத்திய அமைச்சர்கள் உட்பட சிறப்பு அந்தஸ்து பெற்ற பல இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் பிரச்னையை சந்தித்துள்ளனர் என்றார்.திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஓபிரைன் கூறுகையில், அமெரிக்க தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். உலகின் லோக்பாலாக செயல்படுவதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.ஐக்கிய ஜனதா தள எம்.பி சிவானந்த் திவாரி கூறுகையில், இந்திய துணை தூதரை கைது செய்த சம்பவத்துக்கு அமெரிக்காவை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்றார்.
சமாஜ் வாடி எம்.பி ராம் கோபால் யாதவ் கூறுகையில், தாழ்வு மனப்பான்மை காரணமாக இந்த விஷயத்தை அரசு சரியாக கையாளவில்லை என்றார்.அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறுகையில், ‘‘இச்சம்பவத்தை தனியாக பார்க்க கூடாது. இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்கள் தலை துண்டித்த போதும், இந்திய மீனவர்கள் மீதான இலங்கையின் அடக்குமுறைக்கும் இந்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை. அதனால் தனது வெளியுறவு கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார். பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், இது மிகவும் வருந்தத்தக்கது என்றார்.
சல்மான் குர்ஷித் சபதம்
மாநிலங்களவையில் பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,இந்திய தூதரக அதிகாரியை சதி செய்து கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் வேலை செய்த இந்தியப் பெண் மீது டெல்லி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்து இந்தியா அனுப்பும்படி கடந்த செப்டம்பர் 23ம் தேதி வாரன்ட் அனுப்பப்பட்டது. ஆனால் வேலைக்காரப் பெண் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காமல், தூதரக அதிகாரியை கைது செய்துள்ளது. அமெரிக்காவின் செயல் நியாயமற்றது. இந்த விஷயத்தில் துணை தூதரின் கவுரவம் காக்கப்படும். நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரியை திரும்ப அழைத்து வருவோம். அது என் பொறுப்பு. இதை செய்ய நான் தவறினால், மாநிலங்களவைக்கு நான் வரமாட்டேன் என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel