அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டும் – பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துகளை டிசம்பர் 21-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டுமென்று திமுக எம்பி தாமரைச்செல்வன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க, வைர நகைகளை ஒப்படைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது. பெங்களூர் விதான்சவுதாவில் உள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில், வரும் 21-ம் தேதிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டுமென்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel