வங்க கடலில் காற்றழுத்த பகுதி தீவிரம்: புயலாக மாற வாய்ப்பு
சென்னை, டிச. 2–
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் (புயல்) அது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எந்த திசை நோக்கி செல்லும் என அறிவிக்கப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கன மழையும் உள் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் எதிர்பார்க்கலாம். அதிகபட்சமாக எண்ணூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
பாம்பன் 9 செ.மீ., பாபநாசம் 6 செ.மீ., காரைக்கால், குன்னூர் 5 செ.மீ., முதுகொளத்தூர் 4 செ.மீ., பொன்னேரி 2 செ.மீ., பெரம்பலூர் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel