இதய நோய், முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்; சினிமா விழாவில் தெண்டுல்கர் உருக்கமான பேச்சு
மும்பை,
இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மும்பையில் நடந்த சினிமா விழாவில் சச்சின் தெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
சினிமா விழா
இந்தியில் திரிவேதி, உட்சாவ் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சேகர் சுமனின் மகன் இதய நோயால் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து சேகர் சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே ‘ஹாட்லெஸ்’.
இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பை பிரபாதேவியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டார். படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டு தெண்டுல்கர் பேசியதாவது:–
இதய நோய் ஒழிக்கப்படவேண்டும்
எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே நான் இசையின் தீவிர ரசிகன். வான்கடே மைதானத்தில் ஆரம்பித்து உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் இசை என்னோடு கூட பயணிக்கும். இசையை அதிகம் நேசிப்பவன் நான்.
இயக்குனர் சேகர் சுமனின் மகன் 1994–ம் ஆண்டு இதயநோயால் இறந்தது எனக்கு தெரியும். அதை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுத்ததாலேயே தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஏராளமானோர் இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர். இது வேதனைக்குரியது. இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் படத்தின் கதாநாயகன் சுமன், நாயகி ஆரியானா, இசையமைப்பாளர் கவுரவ் தாகன்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel