சனி கிரகத்தின் புதிய படத்தில், நீல நிற புள்ளிப்போல் தோன்றும் பூமி
சூரிய மண்டலத்தில் உள்ள சனி கிரகத்தின் புதிய படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இயற்கையாக சனி கிரகம் எந்த வண்ணத்தில் இருக்கிறதோ அதே வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சனி கிரகம் குறித்து, இதுவரை காணப்படாத காட்சிகள் கொண்ட ஒரு புதிய படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், சனி கிரகம் அதன் 7 சந்திரன்கள், வளையங்கள், பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை இயற்கையான வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. சனி கிரகம் இவ்வாறு புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
நாசாவின், காஸினி விண்கலம் அனுப்பியுள்ள சனி கிரகம் குறித்த 141 படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து காஸினி விண்கல குழுவைச் சேர்ந்த கரோலின் பெற்கோ கூறுகையில், ‘காஸினி விண்கலத்தில் இருந்து கிடைத்துள்ள படங்கள் வியக்கத்தக்கவையாக உள்ளன, இந்த படத்தில் காணப்படும் ஒரு சிறிய நீல நிற புள்ளியில்தான் இந்த உலகில் உள்ள அனைவரும் உயிரோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறி உள்ளார்.
காஸினி விண்கலம் அனுப்பிய இந்த புகைப்படத்தில் சனி கிரகத்தின் சுமார் 6,51,591 கி.மீ தூரம் அளவிற்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி, பூமியில் இருந்து மக்கள் சனி கிரகத்தை பார்த்து கை அசைத்த காட்சிகளையும் காஸினி விண்கலம் அனுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet