ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடத்தை மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்
வெற்றி களிப்புடன் தாயகம் திரும்பிய ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடத்தை மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்கோரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆசிய பசிபிக் அழகிப்போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த சிரிஷ்டி ரமணா முதல் இடத்தை பிடித்து சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் ஆசிய பசிப் அழகி ஹிமாங்கினி சிங் யாது அழகிக்கான கிரீடத்தை சூட்டினார். வெற்றிக் களிப்புடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வந்த சிரிஷ்டி ராணாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மற்றொரு பிரச்சினையும் காத்திருந்தது. அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சூட்டப்பட்ட கீரிடத்தில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி வரியை செலுத்தக் கோரி சுங்கத்துறை அதிகாரிகள் கிரீடத்தை பறிமுதல் செய்தனர். இது போன்ற நிகழ்வுகளில் பரிசு பெற்று இந்தியா வரும் போது மத்திய சுங்கம் மற்றும் தீர்வை துறையினரிடம் முன்கூட்டியே வரிவிலக்குக்கான அனுமதி கடிதம் பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet